கூகுள், ஃபேஸ்புக் விளம்பரங்களுக்கு வரி?

கூகுள், ஃபேஸ்புக் விளம்பரங்களுக்கு வரி?

13/03/2018

img img

புத்ராஜெயா, மார்ச் 14:

கூகுள், ஃபேஸ்புக் விளம்பரங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான பரிந்துரை இன்று மக்களவையில் கலந்தாலோசிக்கப்படும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

நேற்று ஊடகத் தலைமை ஆசிரியர்களுடன் நடைபெற்ற மதிய விருந்துபசரிப்பின் போது இந்த வரி குறித்து பரிந்துரை செய்யப்பட்டது. 

வியட்னாம் நாட்டில் ஃபேஸ்புக், கூகுள் ஆகியவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரி விதிக்கப்படுவதை தெ ஸ்டார் நாளிதழ் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ வோங் சுன் வை எடுத்துக் காட்டினார். 

மேலும், சமூக வலைத்தளங்களின் வரவால், அச்சு, மின் ஊடகங்கள் சந்தித்த சவால்களைக் களைய அரசாங்கமும் ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இந்த நிகழ்வில் #mediacouncil எனும் வார்த்தையை டத்தோஶ்ரீ ஸாஹிட் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இது ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்ககர ஆலோசனைகளை சேகரிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 

பின்செல்