ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உள்ளூர் மக்களுக்கு உதவுவதில் உன்னதமாக செயல்படுபவர் கேவியஸ்

  உள்ளூர் மக்களுக்கு உதவுவதில் உன்னதமாக செயல்படுபவர் கேவியஸ்

  13/03/2018

  img img

  துரைசெல்வன்

  படங்கள்: ஜனாதிபன் பாலன்

  தானாராத்தா, மார்ச் 14: இன, மத பேதமின்றி உள்ளூர் மக்களுக்கு உதவுவதில் உன்னதமாக செயல்படுபவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் என கேமரன்மலை மைபிபிபி தொகுதித் தலைவர் டத்தோ கண்ணதாசன் தெரிவித்தார். 

  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்குக் களப்பணி ஆற்றிவரும் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், எந்தவிதமான உதவியாக இருந்தாலும், இல்லை என்று சொல்லாமல் உதவுவார். அவரின் இந்த உதவிகள் யாவும் மக்கள் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய காலகட்டத்தில் கேமரன்மலையில் டான்ஶ்ரீ கேவியஸ் மீதான நம்பிக்கை அலை அதிகரித்துள்ளது என்றார் அவர். 

  கேமரன்மலையில் மைபிபிபியின் சேவை மையத்தை நோக்கியே மக்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சமூக உதவிகளுக்காக மைபிபிபியை நாடிவரும் மக்களுக்குத் தேவையான உதவிகளை நமது அலுவலகப் பணியாளர்கள் மிகத் திறமையாக முடித்துக் கொடுக்கின்றனர். 

  டான்ஶ்ரீ கேவியஸ் வழங்கும் ஆலோசனையின் பேரில் மக்களுக்கு சென்றடையும் உதவிகள் குறித்து அந்த உதவிகளைப் பெற்றவர்கள் மட்டுமின்றி கேமரன்மலை மக்களும் பாராட்டி வருகின்றனர் என்பதையும் டத்தோ கண்ணா குறிப்பிட்டார். 

  கேமரன்மலையில் சிறந்த சேவைகளை வழங்கிவரும் அரசு சாரா இயக்கங்களுடன் அவ்வப்போது நடத்தப்படும் சந்திப்புகளின் வழி பல்வேறு ஆலோசனைகள் பெறப்படுகின்றன. அந்த ஆலோசனைகளை மைபிபிபி கேமரன்மலை சேவை மையக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே, தேவையானவற்றை செய்யுமாறு டான்ஶ்ரீ கேவியஸ் பணிப்பார். அதற்கேற்ப நமது குழுவினரும் களத்தில் இறங்கிவிடுவார்கள். 

  கேமரன்மலையிலுள்ள அரசு சாரா இயக்கங்கள் தங்களது இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு நிதி விண்ணப்பத்தை முன்வைக்கும்போதும், அவற்றை ஆராய்ந்து உடனடியாக நிதி வழங்கிவிடுவார். பெறப்பட்ட நிதிகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட அரசு சாரா இயக்கங்களும் சில ஏஜென்சிகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப நிகழ்ச்சிகளையோ நடவடிக்கைளையோ மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பது பாராட்டுக்குரிய ஒன்று என டத்தோ கண்ணா நெகிழ்ச்சியுடன் கூறினார். 

   

  பின்செல்