ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சத்துணவுத் திட்டம்: 2.6 மில்லியன் மாணவர்கள் பயனடைகின்றனர்!

  சத்துணவுத் திட்டம்: 2.6 மில்லியன் மாணவர்கள் பயனடைகின்றனர்!

  13/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச் 14: 'ஆர்எம்டி' எனப்படும் சத்துணவுத் திட்டத்தின் வழி நாடுதழுவிய நிலையில் உள்ள சுமார் 2,607,617 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பயனடைவதாக கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மாட்ஸிர் காலிட் தெரிவித்தார். 

  2014ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையில் வெற்றிகரமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் 559,383 மாணவர்களும் 2015இல் 536,103, 2016இல் 538,620, 2017இல் 515,028 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர். 

  இவ்வாண்டு மட்டுமே 458,483 மாணவர்கள் இச்சத்துணவுத் திட்டத்தின் வழி பயனடைகின்றனர். தீபகற்ப மலேசிய மாணவர்களுக்கு தலா 2 வெள்ளி 50 சென்னும் சபா, சரவாக் மாணவர்களுக்கு தலா 3.00 வெள்ளியுமாக 2018ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்திற்காக 250 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருக்கிறது.   

  ஓராண்டில் 190 பள்ளி நாட்களிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுவதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வாரின் கேள்விக்கு டத்தோஶ்ரீ மாட்ஸிர் காலிட் பதிலளித்தார்.   

  முன்னதாக சத்துணவுத் திட்டத்தில் பயனடையும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையைப் பற்றி மக்களவை சந்திப்பில் அவர் கேள்வி எழுப்பினார்.

   

  பின்செல்