ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அடுத்த மாதம் தேமு கொள்கையறிக்கை அறிவிப்பு!

  அடுத்த மாதம் தேமு கொள்கையறிக்கை அறிவிப்பு!

  13/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச் 14:

  14ஆவது பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் கொள்கையறிக்கை அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அம்னோ தகவல் பிரிவு தலைவர் டான்ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். 

  இருப்பினும், அது அறிவிக்கப்படும் தினத்தையோ, தேர்தல் கொள்கை அறிக்கையில் கொண்டுவரப்பட்ட புதுமைகளைப் பற்றியோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. 

  இம்முறை அறிவிக்கப்படும் தேர்தல் கொள்கையறிக்கையில் சிறப்பான பல வாக்குறுதிகள் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார். 

  "காத்திருங்கள். இன்னும் கொஞ்ச நாள்தான். மிகச் சிறப்பான தேர்தல் கொள்கையறிக்கையைக் காண்பீர்கள்" என்றார் அவர். 

  இதனிடையே, 14ஆவது பொதுத் தேர்தலுக்கான கொள்கையறிக்கை இன்னும் 5 வருடத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய வாக்குறுதிகளைக் கொண்டிருக்கும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  பின்செல்