ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  போலீஸ் கண்காணிப்பில் 3,781 ஃபேஸ்புக் பயனர்கள்!

  போலீஸ் கண்காணிப்பில் 3,781 ஃபேஸ்புக் பயனர்கள்!

  13/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச் 14: ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் 3,871 ஃபேஸ்புக் பயனர்களை போலீஸ் தரப்பு கண்காணித்து வருகிறது என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ மாசிர் குஜாட் தெரிவித்தார். 

  இதுவரையில் ஐஎஸ் தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பியதாக நம்பப்படும் 240 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதோடு, 800 பேரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. 76 பேரின் டுவிட்டர் அகப்பக்கங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இவற்றில் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு 9 பேரின் அகப்பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 72 இன்ஸ்டாகிராம் பயனர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ மாசிர் குஜாட் கூறினார்.

  சமூக வலைத்தளங்களில் ஐஎஸ் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்கிறதா என்று தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையில் எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

  ஐஎஸ் தீவிரவாதத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் அவர்களின் கும்பலுக்கு நிதியுதவி பெறுவதற்காகவும் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக பக்கங்களை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். 

   

   

  பின்செல்