ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தாய்மொழி நாளிதழின் வாயிலாக அரசாங்கத்தை ஆதரிப்போம்

  தாய்மொழி நாளிதழின் வாயிலாக அரசாங்கத்தை ஆதரிப்போம்

  13/03/2018

  img img

  ஜனாதிபன் பாலன்

   

  கோலாலம்பூர், மார்ச் 14: மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அவர்களின் 10 ஆண்டுகால சிந்தனையில் தோற்றுவிக்கப்பட்ட தாய்மொழி நாளிதழின் வாயிலாக அரசாங்கத்தை எப்போதும் ஆதரிப்போம் என தாய்மொழி நாளிதழின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் ஐயாதுரை தெரிவித்தார். 

  மக்களின் நலனை முன்வைத்து செயலாற்றிவரும் அரசாங்கத்தின் சேவைகளை தாய்மொழி நாளிதழின் வாயிலாக இந்நாட்டு இந்திய மக்களுக்கு கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுவோம். அரசாங்கத்தின் சேவை குறித்த முழுமையான விழிப்புணர்வை அனைவரும் கொண்டிருக்க வேண்டும். அதோடு, புதிய தலைமுறையை சிறந்த குடிமக்களாக உருவாக்கவும் முயற்சிகள் மோற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர். 

  துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி அவர்களின் தலைமையில் ஊடக உரிமையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் ஆகியோருடன்  நடைபெற்ற மதிய விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறினார்.  

  நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி மிகவும் வித்தியாசமான முறையில் கையாண்டது அனைவரையும் பிரமிக்க செய்தது. வழக்கமாக செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அவர், நேற்று செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டார். அவரின் கேள்விகளுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் மிகச் சிறப்பாக பதிலளித்தனர். 

  இன்றைய கால கட்டத்தில் இணைய ஏடுகளின் பாதிப்பு, பொய்ச் செய்திகள் தொடர்பான கலந்துரையாடல் என மிக சுவாரசியமாக நடைபெற்ற நிகழ்ச்சி ருசியான மதிய உணவுடன் நிறைவுபெற்றது. 

   

  பின்செல்