ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  லுமூட் நாடாளுமன்றத் தொகுதியில் ஸம்ரி

  லுமூட் நாடாளுமன்றத் தொகுதியில் ஸம்ரி

  13/03/2018

  img img

  ஈப்போ, மார்ச் 14:

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் லுமூட் நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸம்ரி காடிர் கருத்துரைக்க மறுத்துவிட்டார். 

  "அந்தச் செய்தி ஒரு நாளிதழின் கருத்து மட்டுமே. இது தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முடிவெடுப்பார்" என்று செக் குடியரசின் உயர் ஆணையர் ருடோல்ஃப் ஹைக்கலை தமது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் அவர் சொன்னார்.

  பங்கோர் சட்டமன்றத்தில் போட்டியிட்ட ஸம்ரி அடுத்ததாக லுமூட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. 

  கடந்த பொதுத் தேர்தலில் மசீசவின் பாரம்பரியத் தொகுதியான லுமூட்டில் பிகேஆர் கட்சி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. 

   

  பின்செல்