ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஓராங் ஆசால் கிராமங்களுக்கு நற்செய்தி நீர் சுத்திகரிப்பிலிருந்து மின்சார உற்பத்தி யுடிஎம் - மைபிபிபி கைக்கோர்ப்பு

  ஓராங் ஆசால் கிராமங்களுக்கு நற்செய்தி நீர் சுத்திகரிப்பிலிருந்து மின்சார உற்பத்தி யுடிஎம் - மைபிபிபி கைக்கோர்ப்பு

  12/03/2018

  img img

  ரதி முனியாண்டி 

  படங்கள்: ஜனாதிபன் பாலன் 

  மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (யுடிஎம்) கைக்கோர்த்துள்ள மைபிபிபி நீர் சுத்திகரிப்பிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை கேமரன்மலை 'போஸ் லெமோய்' பகுதியில் நடைமுறைப்படுத்தியுள்ளது என மைபிபிபி தேசியத் தலைவர் எம்.கேவியஸ் தெரிவித்தார். 

  யுடிஎம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுடைய திட்டமான 'ஹைட்ரோ வோர்டெக்ஸ்', நீர் சுத்திகரிப்பின் வாயிலாக மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு பயனளிக்க கொண்டுவரப்பட்டது. 

  இத்தகைய பயனான நடவடிக்கை நிதி பற்றாற்குறையால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தாம் குறிப்பிட்ட தொகையை வழங்கி 'போஸ் லெமோய்' கிராமத்தில் பரிட்சார்த்த முயற்சியை மேற்கொள்ள ஆதரவளித்ததாக டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். 

  "கேமரன்மலையில் மின்சாரம், தண்ணீர் ஆகிய அடிப்படை வசதிகளில் பிரச்சினை இருக்கக்கூடாது என்பதில் அதீத அக்கறை செலுத்துபவன் நான். இங்குள்ள சில 'ஓராங் ஆசால்' கிராமங்களில் மின்சார வசதி இல்லை என்பதை நான் அறிவேன். அதற்கு தீர்வாக இத்திட்டம் அமைந்தால், சம்பந்தப்பட்ட கிராமங்களில் இருள் அகலும்" என்றார் அவர்.

  முழுக்க முழுக்க யுடிஎம் விரைவுரையாளர்களின் முயற்சியில் உருவான இத்திட்டம் கூடிய விரவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும். மேலும், இத்திட்டம் பயனானதாக அமைந்தால், மின்சார வசதி இல்லாமல் சிரமப்படும் 'ஓராங் ஆசால்' கிராமங்களுக்கு நற்செய்தியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

  அண்மையில் போஸ் லெமோய் மக்களுடன் 'செந்துஹான் ரக்யாட்' எனும் நிகழ்ச்சி மிக விமரிசையாக மேற்கொள்ளப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு வருகையளித்தபோது, 'ஹைட்ரோ வோர்டெக்ஸ்' திட்டம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை டான்ஶ்ரீ கேவியஸ் கண்காணித்தார். அத்திட்டம் குறித்து அனைவருக்கும் விளக்கமளித்தார். 

  இதனிடையே, மிகச் சிறப்பான திட்டத்தை 'போஸ் லெமோய்' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ள யுடிஎம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு டான்ஶ்ரீ கேவியஸ் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். 

   

  பின்செல்