ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மகாராஷ்டிராவை மிரள வைத்த விவசாயிகளின் மெகா பேரணி

  மகாராஷ்டிராவை மிரள வைத்த விவசாயிகளின் மெகா பேரணி

  12/03/2018

  img img

   

  மும்பை, மார்ச்.12: மகாராஷ்டிராவில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி 40 ஆயிரம் விவசாயிகள் ஒட்டு மொத்த இந்தியாவை மிரள வைக்கும் வகையில் மெகா பேரணியை துவக்கியுள்ளனர்.

  மகாராஷ்டிராவில் பா.ஜ சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பா.ஜ.வின் தேவேந்தர பட்னாவிஸ் உள்ளார். இம்மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே விவசாயிகள் தங்களது அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையில் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய் கிழமையன்று நாசிக் நகரில் இருந்து புறப்பட்டனர். இதில் பல்வேறு விவசாய சங்கங்கள், விசாய அமைப்புகள் என சில நூறு பேரை திரண்டனர். இவர்கள் செல்லும் பேரணியை பார்த்த மேலும் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றதால் சனி கிழமை நிலவரப்படி சுமார் 35 ஆயிரம் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

  கடந்த 5 நாட்களாக விவசாயிகள் மேற்கொண்டுள்ள இந்த மெகா பேரணி தினமும் 30 கி.மீ. என 180கி.மீ. தூரம் இலக்கு நிர்ணயித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசை மிரள வைத்துள்ள இந்த பேரணிக்கு சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்த மெகா பேரணியால் மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  பின்செல்