ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பெண் இனமே நீ வாழ்க!

  பெண் இனமே நீ வாழ்க!

  08/03/2018

  img img

  ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்... 

  பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு... 

  ஒரு கவளம் சோற்றை கூட 

  அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..! 

  ஓர் உயிரையே உள்ளே வளரச் செய்கிறது... 

   

  உலக அதிசயம்..! 

  எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் 

  கருவறையை விட பாதுகாப்பான அறையை 

  குழந்தைக்கு யாரால் தர முடியும்..??? 

  இறைவனின் வல்லமைக்கு இதனை விட 

  சான்று வேண்டுமா..??? 

   

  இது பெண்மையின் மறுபிறவி…! 

  பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது, 

  பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..! 

  வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் ஆனால் 

  இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!! 

   

  குழந்தையாய்… 

  சிறுமியாய்… 

  குமரியாய்… 

  மனைவியாய் வளரும் உறவு 

  தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..! 

   

  கொஞ்சும் போது 

  தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே 

  தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...! 

   

  நள்ளிரவில், 

  குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல், 

  தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!! 

  தாய்மையின் மகத்துவத்தை எத்தனை 

  தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம். 

   

  பின்செல்