ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தேமுவுக்கு ஆதரவளிக்கின்றனர் நம்பிக்கையை வேரூன்றச் செய்தவர் கேவியஸ்!

  எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தேமுவுக்கு ஆதரவளிக்கின்றனர் நம்பிக்கையை வேரூன்றச் செய்தவர் கேவியஸ்!

  21/02/2018

  img img

  ருபினா மேரி அம்புரோஸ்

  படம்: ஜனாதிபன் பாலன்

   

  தானாராத்தா, பிப். 22: "கடந்த பொதுத் தேர்தலில் தானா ராத்தா சட்டமன்றத் தொகுதியை ஜசெக வென்றது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில்தான் ஜசெக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம். ஆயினும், எதிர்பார்த்த உதவிகள் எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால், இப்போது மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ்  எங்களின் ஏமாற்றத்திற்கு அருமருந்தாக வலம் வருகிறார் என இங்குள்ள சீன சமூகத்தினர் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

   

  எங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இவரிடம் உள்ளது. இவரின் உதவியைப் பெற்றிருப்பது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். டான்ஶ்ரீ கேவியசின் தலைமைத்துவ ஆற்றலானது அவரின் மீதான நம்பிக்கையை எங்களுக்குள் அதிகமாகவே விதைத்துள்ளது என்றும் இங்குள்ள சீன சமூகப் பிரதிநிதிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இவர்களின் இந்தப் பதிவானது மேற்கண்ட கூற்று உண்மை என்பதை நிரூபணம் செய்துள்ளதாகவே அமைகின்றது. 

      

  சீனப் புத்தாண்டை முன்னிட்டு கேமரன்மலை, பிரிஞ்சாங்கில் நடைபெற்ற கோங் ஹியோங் கழக விருந்துபசரிப்பு நிகழ்விற்கு டான்ஶ்ரீ எம்.கேவியஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்நிகழ்வில் கொங் ஹியோங் கழகத் தலைவர் ஆ கோங், தங்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தேசிய முன்னணிக்கே என்று பகிரங்கமாக அறிவித்தார்.  

   

  காய்கறி, பூந்தோட்டக்காரர்களுக்கான கழகம்தான் இந்த கோங் ஹியோங் கழகம். விவசாயம், தோட்டம் சார்ந்த தொழில்களே கேமரன்மலை வாசிகளின் முதன்மை தொழில்துறையாக இருக்கின்றது. அவ்வகையில், கோங் ஹியோங் கழகம் முக்கிய பங்கை வகிக்கிறது. இவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவது எளிதான ஒன்றல்ல. எனினும், டான்ஶ்ரீ கேவியசின் சேவை இவற்றை சாத்தியமாக்கியுள்ளது.

   

  தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதா என்று கேமரன்மலை மக்கள் தயங்கிக் கொண்டிருந்த காலம் மாறி இன, மத வேறுபாடற்ற ஒருமித்த ஆதரவும் தேசிய முன்னணிக்கே என்று பகிரங்கமாக அறிவிக்கப்படும் அளவிற்கு டான்ஶ்ரீ கேவியசின் சேவை அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

   

  டான்ஶ்ரீ கேவியசால் கேமரன்மலை வாசிகளிடையே தேசிய முன்னணி மீதான நம்பிக்கை அதிகமாகவே துளிர்விட்டிருப்பதோடு 14ஆவது பொதுத் தேர்தலில் 'P078' தொகுதியில் தேமுவின் வெற்றிக்கு டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களின் தன்னலமற்ற சேவை  நங்கூரமிட்டுள்ளது. 

   

  மக்களுக்கும் தமக்கும் இடைவெளியை ஊக்குவிக்காத இவரின் பரஸ்பர அணுகுமுறை கேமரன்மலை வாக்களர்களின் மனங்களைப் பேரளவில் கவர்ந்துள்ளது. கேமரன்மலையில் டான்ஶ்ரீ கேவியசின் சேவை தொடங்கப்பட்ட காலம் தொடங்கி தேசிய முன்னணி மீதுள்ள தவறான கண்ணோட்டம் மாறியதோடு, மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் குவித்த கட்சியாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   

  பின்செல்