ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  போலி மைகார்ட்: விசாரணை அறிக்கை தொடங்கியது!

  போலி மைகார்ட்: விசாரணை அறிக்கை தொடங்கியது!

  20/02/2018

  img img

  கோத்தா கினபாலு, பிப்.21:

  தீவிரவாதிகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதாக வெளிவந்த அறிக்கையைத் தொடர்ந்து, போலி மைகார்ட் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் கும்பலைப் பிடிக்க விசாரணை அறிக்கை தொடங்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

  இந்த விசாரணை தேசிய பதிவிலாகா (ஜேபிஎன்), போலீசார் ஆகியோரால் மேற்கொள்ளப்படும். ஜேபிஎன், குடிநுழைவு தரப்பினர் ஆகாய மார்க்கமாக நாட்டுக்குள் நுழையும் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

  இதன் வழி, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைபவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் சொன்னார்.

  மேலும், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சில பேரை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  பின்செல்