ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  தேசிய குறுக்கோட்டப் போட்டிக்கு கேமரன்மலை செல்வங்கள் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் பாராட்டு

  தேசிய குறுக்கோட்டப் போட்டிக்கு கேமரன்மலை செல்வங்கள் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் பாராட்டு

  14/02/2018

  img img

  ரதி முனியாண்டி

  'கேமரன்மலை செல்வங்கள்' அனைத்து ரீதியிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தேசிய அளவிலான குறுக்கோட்டப் போட்டிக்கு பகாங் மாநிலத்தை பிரதிநிதிக்க தேர்வு பெற்ற மைரித்தா, ஷர்மிளா, தனேஸ்வர் ஆகியோரின் சாதனை அமைந்துள்ளது என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

  "வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான குறுக்கோட்டப் போட்டிக்குத் தேர்வு பெற்ற இவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அதோடு, இவர்களைத் தயார்படுத்திய சதுர்முகன் எனும் துடிப்புமிக்க பயிற்சியாளருக்கு எனது பாராட்டுகள்.

  கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் எனக்கு அறிமுகமான சதுர்முகன் சில மாணவர்களை தடகள விளையாட்டுகளுக்குப் பயிற்றுவித்து வருவதாகக் கூறினார். அவரையும் அங்கு பயிற்சி பெறும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், நான் ஒருசில விளையாட்டுக் கருவிகளை அன்பளிப்பு செய்தேன்.

  இம்மாணவர்களின் வெற்றிக்கு எள்ளளவு பங்களிப்புச் செய்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கேமரன்மலை செல்வங்களுக்கு கல்வி, விளையாட்டு ஆகியவற்றுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதை தொடருவதற்கு மைரித்தா, ஷர்மிளா, தனேஸ்வர் ஆகியோரின் வெற்றி உந்துதலாக அமைகின்றது" என டான்ஶ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.

  இதனிடையே, இம்மூன்று மாணவர்களின் வெற்றி குறித்து பெருமிதம் கொண்ட சதுர்முகன், இதனை பகாங் மாநில இந்திய சமுதாயத்தின் பெருமைக்குரிய தருணமாக கருதுவதாகக் கூறினார்.

  முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரரான இவர், கேமரன்மலையில் தலைசிறந்த விளையாட்டாளர்களை உருவாக்க தடகள பயிற்சிகளை இலவசமாகவே வழங்கி வருகிறார்.

  மேலும், தமக்கு பலவகையில் உதவியும் ஊக்கமும் வழங்கி வரும் மைபிபிபி கட்சிக்கும் அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

   

   

  பின்செல்