ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஒற்றுமையும் ஒரே இலக்கும் லட்சியத்திற்கு வழிவகுக்கும்

  ஒற்றுமையும் ஒரே இலக்கும் லட்சியத்திற்கு வழிவகுக்கும்

  14/02/2018

  img img

  கோலாலம்பூர், பிப்.15: இந்நாட்டில் வாழும் மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு செழிப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்க நினைக்கும் அதே வேளையில், ஒற்றுமையாகவும் ஒரே இலக்கோடு பயணித்தலும் அதற்கு வழிகோலும் என சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

  உயர்ந்த, வளமிக்க நாட்டை உருவாக்க நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தில் முழு நம்பிக்கையோடு உழைத்தால் இதனை சாத்தியமாக்கலாம். மேலும், நம்மிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் புரிந்துணர்வும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

  மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் சீனப் பெருநாளானது, தத்தம் உறவுகளை இணைக்கச்செய்வதோடு, புதிய உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. சீனப் பெருநாளின்போது பல்வேறு ஊர்களுக்குச் சென்று பெருநாள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் சீனர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றால் எப்போதும் கவரப்படுபவன் நான்.

  இந்தப் பெருநாளின்போது, சீனர்கள் மட்டுமல்லாது அனைத்து மலேசியர்களும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். நல்லிணக்க அடிப்படையில் அசைக்க முடியாத நம்பிக்கையையும் நல்லதோர் உறவையும் கொண்டிருக்கும் மலேசியர்களான நாமும் இக்கொண்டாட்டத்தில் இணைய வேண்டும் எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் வேண்டுகோள் விடுத்தார்.

   

   

  பின்செல்