ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது

  கேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது

  14/02/2018

  img img

  தானாராத்தா, பிப்.15: கேமரன்மலையில் மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் மேற்கொள்ளும் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது என மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

  கேமரன்மலையில் யார் வேண்டுமானாலும் சேவை செய்யட்டும். அதோடு, எங்களின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போன்றும் அவர்கள் செய்யட்டும். ஆனால், கேமரன்மலை மக்களுடன் நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களின் தொடர் நடவடிக்கைகளை எவராலும் தடுக்கவோ முறியடிக்கவோ முடியாது என்றார் அவர்.

  கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களை மைபிபிபி தங்களது சேவைகளால் ஆக்கிரமித்துவிட்டது. குறிப்பாக, கேமரன்மலையில் அனைத்து தலைவர்களும் களம் இறங்கிவிட்டனர். அவர்களுடன் சத்தியா சுதாகரனும் காணப்பட்டார்.

  கேமரன்மலையில் நீங்களும் இறங்கிவிட்டீர்களே. டான்ஶ்ரீ கேவியசுக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது? கேமரன்மலையில் இன்னொரு கட்சியும் களத்தில் இறங்கியுள்ளதே என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த சத்தியா மேலும் இவ்வாறு கூறினார்.

  ஒரு தொகுதியில் யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். அந்தச் சேவைகள் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதோடு, செய்யும் சேவைகள் தேசிய முன்னணியைப் பாதிக்காத வண்ணம் அமைதல் வேண்டும். சேவை செய்யத் துணிந்தவர்களை மைபிபிபி ஒருபோதும் தடுக்காது. தடுத்த வரலாறும் இல்லை. ஆனால், நாம் செய்யும் நடவடிக்கைகளைப் போன்று செய்வதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

  எங்களின் தேசியத் தலைவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கேமரன்மலையில் பணி செய்து வருகிறார். அதோடு, அவர் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அவர்களின் ஆசியையும் பெற்றுத்தான் களத்தில் இறங்கியுள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

  கேமரன்மலையைப் பொறுத்தவரை, வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் யார் வேட்பாளராக நியமனம் செய்யப்படுவார் என்பது தேமு தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ நஜிப் கையில் இருக்கிறது. இதனை டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களும் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்பதையும் சத்தியா சுட்டிக் காட்டினார்.

  கேமரன்மலைக்கு வந்துச் செல்லும் சுற்றுப்பயணில்லர் டான்ஶ்ரீ கேவியஸ். இந்த மண்ணின் மைந்தர். தமது மக்களுக்குப் பிரதியாக இருந்து 'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற கொள்கையை முன்னிறுத்தி களத்தில் இறங்கியுள்ளாரே தவிர, கேமரன்மலை மக்களை வழிநடத்தும் நோக்கத்தில் அல்ல. இதனை கேமரன்மலை மக்கள் மட்டுமின்றி மலேசியர்களும் அறிந்து வைத்துள்ளனர்.

   

  ஓராங் அஸ்லி மக்களை அன்பால் அணுகும் டான்ஶ்ரீ கேவியஸ், அவர்களை ஓராங் அசால் என்றுதான் அழைக்கிறார். அங்குள்ள மக்களுடன் அவர் சகஜமாகவும் உறவுகளுடன் பழகுவது போல்தான் பழகுகிறார். இதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நேரில் கண்டால்தான் உணர முடியும் என மைபிபிபி புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவருமான சத்தியா சுதாகரன் சொன்னார். 

  பின்செல்