ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அக்கறை கொண்ட அரசாங்கம் தேசிய முன்னணி

  அக்கறை கொண்ட அரசாங்கம் தேசிய முன்னணி

  14/02/2018

  img img

  தானாராத்தா, பிப்.14: மக்களின் நலனை முன்னிறுத்திய அரசாங்கமாக தேசிய முன்னணி மட்டுமே நிரூபித்து வருகிறது என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் பெருமிதத்துடன் கூறினார்.

  பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் தலைமையிலான அரசாங்கம் இந்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு செய்துவரும் உருமாற்றத்தை நாம் உணர்கின்றோம். நமது பிள்ளைகளின் எதிர்காலம் என்பதுகூட இந்த உருமாற்றத்தை உட்படுத்தியே அமைகின்றது. வளமான வாழ்வை அமைத்துக் கொடுத்து அதில் இன்பம் காணும் அரசியல் அரணாக தேசிய முன்னணி மட்டுமே கோலோச்சியுள்ளது என்றார் அவர்.

  அண்மையில் இங்குள்ள சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் அரசாங்கத்தின் ஆரம்பப் பள்ளி உதவித் தொகையையும் பகாங் அறவாரியத்தின் நிதி உதவியையும் எடுத்து வழங்கிய பின்னர் அங்குப் பேசிய டான்ஶ்ரீ கேவியஸ் மேற்கண்டவாறு கூறினார்.

  மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையில் எவ்வித இடைவெளியும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் வழியே சிறந்த மாணவ சமுதாயத்தை இந்த நாட்டுக்காக தயார்ப்படுத்த முடியும். மாணவர்கள் மீதான புரிதலைப் பெற்றோர்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த மூன்று தரப்புக்கும் இடையே நேர்மறை எண்ணம் உருவாகும்.

  நமது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வும் முன்னேற்றம் காணும் என்று எண்ணம் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப திட்டங்களை அறிமுகம் செய்தும் வருகிறார். இந்தத் திட்டங்களின் வழி நன்மை அடையும் தரப்பினர் பிரதமருக்கு ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கேமரன்மலையில் 'அங்கிள் போண்ட்' என்ற அடைமொழியுடன் வலம் வரும் டான்ஶ்ரீ கேவியஸ் ஆலோசனை கூறினார்.

   

  சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் பயிலும் 15 மாணவர்களுக்கும் 100 வெள்ளி உதவித் தொகையும் பகாங்கில் பிறந்த 7 மாணவர்களுக்கு பகாங் அறவாரியத்தின் உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதனை எடுத்து வழங்குவதற்கு வருகை புரிந்த டான்ஶ்ரீ கேவியசுக்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி தவமலர் தேவி நன்றி பாராட்டினார்

  பின்செல்