ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பொய் செய்திகளுக்கான சட்ட வரைவு சீனப் புத்தாண்டுக்கு பிறகு தாக்கல்!

  பொய் செய்திகளுக்கான சட்ட வரைவு சீனப் புத்தாண்டுக்கு பிறகு தாக்கல்!

  14/02/2018

  img img

  கோலாலம்பூர், பிப். 14: போலி செய்திகளை முடக்கும் சட்ட வரைவு சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.

  பொய்யான செய்திகளுக்கான விளக்கம், பொய் செய்திகளைப் பரப்புபவர்களுக்கான தகுந்த தண்டனை ஆகியவை குறித்து அமைச்சரவையில் விவரிக்கப்படும்.

  இப்புதிய சட்ட பரிந்துரை குறித்து அரசு சார்பற்ற இயக்கங்கள், ஊடகப் பிரதிநிதிகள், சட்டப் பிரிவு ஏஜென்சிகள், மக்கள் தலைவர்கள் என பலதரப்பட்டோரை உட்படுத்தி 3 அமர்வுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையினோர் பொய் செய்திகளுக்கான விளக்கம், இச்சட்டத்தை செயல்படுத்தக்கூடிய பொறுப்பான தரப்பு பற்றி கேள்விகளை எழுப்பினர்.

  மேலும் சிலர், பொய் செய்திகளை மதிப்பிடவும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் பொய் செய்தியையும் பொதுவான கருத்தையும் பகுத்தாய்வதற்கும் சிறப்பு ஏஜென்சி அமைப்பு குறித்தும் பேசியதாக இங்கு நடைபெற்ற கருத்தரங்கை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டத்தோஶ்ரீ அஸாலினா கூறினார்.

   

   

  பின்செல்