ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஜாலான் காசிங் இபிஎஃப் கட்டடத்தில் தீ!

  ஜாலான் காசிங் இபிஎஃப் கட்டடத்தில் தீ!

  14/02/2018

  img img

  பெட்டாலிங் ஜெயா, பிப்.14:

  பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் அமைந்துள்ள ஊழியர் சேமநிதி வாரிய (இபிஎஃப்) கட்டடத்தில் நேற்று முற்பகல் 11.53 மணியளவில் தீப்பற்றியது.

  இக்கட்டடத்திலிருந்து வெளியான கரும் புகை கூட்டரசு பிரதேச நெடுஞ்சாலையிலிருந்தே காணமுடிந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயற்சித்தனர்.

  டாமான்சாரா, கிள்ளான் துறைமுகம், ஹங் துவா, பந்தாய் ஆகிய பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 43 தீயணைப்பு வீரர்கள் முயற்சித்தும் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.

  இருப்பினும் இபிஎஃப் கட்டடத்தில் 40 விழுக்காடு தீயில் கருகியதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை தலைவர் முகமட் ஹஃபிஸ் மாட் டலி தெரிவித்தார்.

  தீ அலாரம் ஒலித்ததும் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேறியதால், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

  கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளில் ஏற்பட்ட தீப் பொறி, வெப்பமான சீதேஷண நிலை, பலத்த காற்று ஆகியவை தீ ஏற்பட காரணமாக அமைந்தன என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

   

  முதல் மாடியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளின் போது, தீப்பொறிகள் எளிதில் பற்றிக் கொள்ளும் கண்ணாடி உறைப்பூச்சு மீது பட்டதால், தீ தீவிரமடைந்தது என தெரிவிக்கப்பட்டது

  பின்செல்