ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இளைய சமுதாயத்துக்கு சமயத்தைப் போதிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை: பாலகிருஷ்ணன் கந்தசாமி வருத்தம்

  இளைய சமுதாயத்துக்கு சமயத்தைப் போதிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை: பாலகிருஷ்ணன் கந்தசாமி வருத்தம்

  14/02/2018

  img img

  கோலாலம்பூர், பிப்.14:

  இந்து சமயத்தை இளைய தலைமுறைக்குப் போதிக்க ஆர்வம் காட்டுபவர்கள் குறைவாகவே உள்ளனர் என மலேசிய நால்வர் மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி வருத்தம் தெரிவித்தார்.

  சமயத்தைப் போதிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மலேசிய நால்வர் மன்றம் பயிற்சியளித்து, நற்சான்றிதழ் வழங்கத் தயாராக உள்ளது. ஆனால், இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சமய ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகின்றது.

  ஆசிரியத் தொழிலில் இருப்பவர்களைச் சமய ஆசிரியர்களாகவும் செயல்பட வைக்க மன்றம் முனைப்பு காட்டுகிறது. ஆனால், அவர்களை பயிற்சிக்கு வரவழைப்பது சவால்மிக்க காரியமாக அமைகின்றது. ஏனெனில், இதற்கு செலவிடும் நேரத்தில் பிரத்தியேக வகுப்புகளைப் போதித்தால், அவர்களுக்கு வருமானம் கிடைக்குமே என சிலர் யோசிக்கிறார்கள் என்றார் அவர்.

  தலைநகர் மெட்ராஸ் கஃபேவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

  மேலும், நமது நாட்டில் சமய விவகாரங்களை ஒருங்கிணைக்க மடாதிபதிகள் என யாரும் இல்லை. ஆகையால், நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் தைப்பூசத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டபோது எழுந்த சர்ச்சைகள் குறிப்பிடத்தக்கன.

   

  இந்தியாவில் சமய விவகாரங்களை ஒருங்கிணைக்க மடாதிபதிகள் இருப்பது போல நமது நாட்டில் பதிவுபெற்றுள்ள 1,006 சமய இயக்கங்களையும் வழிநடத்த ஒரு தலைமைத்துவம் தேவை எனவும் திரு.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்

  பின்செல்