ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  செபஸ்தியர் கலைக்கூடம் ஏற்பாட்டில் புந்தோங்கில் ஒற்றுமை பொங்கல் விழா

  செபஸ்தியர் கலைக்கூடம் ஏற்பாட்டில் புந்தோங்கில் ஒற்றுமை பொங்கல் விழா

  14/02/2018

  img img

  ஈப்போ, பிப்.14: கடந்த 11.2.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் மணி 3:00 அளவில் புந்தோங் ஐ.ஆர்.சி மைதானத்தில் பேரா செபஸ்தியர் கலைக்கூடம், பேரா அரசு சாரா இயக்கம் இணைந்து 'கார்னிவல் பொங்கல் புந்தோங் 2018' எனும் தலைப்பில் ஒற்றுமை பொங்கல் விழாவை மிகவும் பிரம்மாண்ட முறையில் கொண்டாடினார்கள்.

  ஒவ்வொரு ஆண்டும் ஈப்போ, புந்தோங் வட்டாரத்தில் தவறாமல் இவ்விழாவை செபஸ்தியர் கலைக்கூடமும் அரசு சாரா இயக்கமும் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டும் செபஸ்தியர் கலைக்கூட இயக்குனர் டாக்டர் இருதயம் செபஸ்தியர், இவ்வாண்டு புதுமையான வகையில் பொங்கல் விழாவை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 7.2.2018 புதன்கிழமை சந்திப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

  இக்கூட்டத்தில் அனைத்து அரசு சாரா இயக்கமும் டாக்டர் செபஸ்தியருக்கு ஆதரவு வழங்கி, அவரது நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். புந்தோங் வட்டார மைபிபிபி சேவை மைய தலைவர் டத்தோ நாரான் சிங் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

  11.2.2018 ஞாயிற்றுக்கிழமை காலை, செபஸ்தியர் கலைக்கூட ஏற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஐ.ஆர்.சி மைதானத்தை, தமிழ் பாரம்பரிய கலாச்சார பின்னணியில் விளையாட்டு மைதானமாக மாற்றினார்கள். மதியம் 2:00 மணி தொடங்கி அனைத்து அரசு சாரா இயக்கங்கள், பொது மக்கள் கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

  இந்நிகழ்வில் சுமார் 24 விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விளையாட்டுகளை அனைத்து அரசு சாரா இயக்கங்களும் ஏற்பாடு செய்திருந்தனர். சிறார்கள் விளையாடுவதற்கு சூப்பர் டூப்பர் பலூன் ஏற்பாடு செய்யப்பட்டது.

  கடும் வெயிலில் பொதுமக்கள் அனைவருக்கும் தாகம் தீர்க்க மோர் குளிர்பானம் ஏற்பாடு செய்யப்படனது. புந்தோங் வட்டாரத்தில் அமைந்துள்ள தலப்பாகட்டி பிரியாணி உணவக உரிமையாளர் திரு. செல்வம் இலவசமாக உணவு வழங்கினார்.

  சுமார் 1,000 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உள்ள போட்டி விளையாட்டுகள், உணவு, பானம் என அனைத்தும் முற்றிலும் இலவசமாக, செபஸ்தியர் கலைக்கூடத்தினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

   

  செய்தி: ல.லலிதாஅம்பிகை

  பின்செல்