ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  புந்தோங்கில் தேமு வேட்பாளராக மைபிபிபியின் டத்தோ நாரான் சிங்! டான்ஸ்ரீ கேவியஸ் அறிவிப்பு

  புந்தோங்கில் தேமு வேட்பாளராக மைபிபிபியின் டத்தோ நாரான் சிங்! டான்ஸ்ரீ கேவியஸ் அறிவிப்பு

  12/02/2018

  img img

  ஈப்போ பிப். 13: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில், பேராவில்  புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக மைபிபிபியைச் சேர்ந்த டத்தோ நரான்சிங் போட்டியிடுவார் என்று மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அதிரடியாக அறிவித்தார்.

  என்னைப் பொறுத்தவரை புந்தோங்கில் போட்டியிடவிருப்பவர் டத்தோ நரன்சிங்தான். ஆனால், கடைசி நேரத்தில் யார் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் இந்தத் தொகுதியில் தொடர்ந்து மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு டத்தோ நரன்சிங்கிற்கு மக்கள் வற்றாத ஆதரவு வழங்கும்படி டான்ஸ்ரீ கேவியஸ் கேட்டுக்கொண்டார்.

  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை மைபிபிபி உணர்ந்தது. அன்று தொடங்கி இந்த நிமிடம் வரை இங்கு பொது மக்களின் நன்மைக்காக டத்தோ நரன்சிங் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

  புந்தோங்கில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதால் அங்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் மைபிபிபி மேம்பாட்டுத் திட்டக் குழு பல்வேறு செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

  புந்தோங்கில் செபஸ்தியர் கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் அரசு சாரா இயக்கங்களின் பேராதரவுடன் ஐ.ஆர்.சி திடலில் நடைபெற்ற கலாச்சார விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட டான்ஸ்ரீ கேவியஸ் இவ்வாறு தமதுரையில் குறிப்பிட்டார்.

  முன்னதாக 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மசீச வசமிருந்த புந்தோங் தொகுதியை மஇகா தனதாக்கிக் கொண்டது. இதில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் போட்டியிட்டு தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

  பின்செல்