350 வெள்ளிக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்

350 வெள்ளிக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்

12/02/2018

img img

கோலாலம்பூர், பிப்.13:

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 350 வெள்ளிக்கு போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கி, மலேசியாவிற்குள் நுழைவதாக அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், இதுபோன்று போலி மலேசிய அடையாள அட்டைகளை மலிவு விலைக்கு வாங்கும் தீவிரவாதிகள், சபா, தீபகற்ப மலேசியாவிற்குள் எளிதில் நுழைந்து, அங்கு பாதுகாவலர் பணிகள் உள்ளிட்ட பணிகளில் சேர்வதாகவும் கூறுகின்றது.

 

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டாஹ்வான் என்ற 22 வயது சந்தேக நபர் சபாவில் 1,000 வெள்ளி கொடுத்து, போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கியதாகவும், அதேபோல் நூர்ஹான் சாஹி ஹாக்கிம் என்ற 33 வயதான நபர், 350 வெள்ளி கொடுத்து மலேசிய அடையாள அட்டை வாங்கியதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

பின்செல்