ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஆஸ்ட்ரோ வானவில், ஆஸ்ட்ரோ உலகத்தில் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி திருவிழாவின் சிறப்பு நேரடி ஒளிபரப்பு

  ஆஸ்ட்ரோ வானவில், ஆஸ்ட்ரோ உலகத்தில் ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி திருவிழாவின் சிறப்பு நேரடி ஒளிபரப்பு

  12/02/2018

  img img

  முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் தெய்வீக விழாக்களில் மஹாசிவராத்திரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

   

  இவ்வாண்டு நடைபெறவுள்ள மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பு நேரலை ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் ஆஸ்ட்ரோ உலகத்தில் ஒளியேறவுள்ளது. இன்று 13ஆம் தேதி மலேசிய நேரப்படி இரவு 8.15 மணி தொடக்கம் இந்தச் சிறப்பு நேரலை இடம்பெறவுள்ளது.

   

  கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரம் கொண்ட சிவனின் முகத்தோற்றத்துடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவனின் முழுமையான முகத் தோற்றத்தைக் கொண்ட உலக அளவில் மிகப்பெரிய சிலையாக இது கருதப்படுகிறது.

   

  அன்றைய இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201, ஆஸ்ட்ரோ உலகம் www.astroulagam.com.my அகப்பக்கத்தில் கண்டு களிக்கலாம்.

   

  பின்செல்