ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஊழல் தடுப்பு உறுதிமொழி: சிலாங்கூர் இன்னும் கையெழுத்திடவில்லை!

  ஊழல் தடுப்பு உறுதிமொழி: சிலாங்கூர் இன்னும் கையெழுத்திடவில்லை!

  12/02/2018

  img img

  ஷா ஆலம், பிப்.12:

  14ஆவது பொதுத் தேர்தலுக்குள் சிலாங்கூர் மாநில அரசு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உறுதிமொழியில் கையெழுத்திடுமா என காத்திருப்பதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ ஸுல்கிப்லி அகமட் தெரிவித்தார்.

  எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள பினாங்கு, கிளந்தான் ஆகிய மாநிலங்கள் கூட ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், சிலாங்கூர் மாநிலம் மட்டும் இன்னும் அந்த உறுதிமொழியில் கையெழுத்திடாதது வருத்தமளிக்கின்றது.

  இருப்பினும், சிலாங்கூர் மாநிலம் விரைவில் இந்த உறுதிமொழியில் கையெழுத்திடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.

  இதர மாநிலங்கள் உறுதிமொழியில் கையெழுத்திட எவ்வித பிரச்சினையையும் எதிர்நோக்காத நிலையில், சிலாங்கூர் மட்டும் வித்தியாசமாக நடந்து கொள்கிறது. சிலாங்கூரும் இதர மாநிலங்களைப் போல பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என நேற்று ஃபாமா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னார்.

   

   

  பின்செல்