ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அனைத்து நிலை மாணவர்களை உருமாற்றும் பிரிஞ்சாங் தேசியப் பள்ளிக்கு உதவுவேன்!

  அனைத்து நிலை மாணவர்களை உருமாற்றும் பிரிஞ்சாங் தேசியப் பள்ளிக்கு உதவுவேன்!

  12/02/2018

  img img

  ரதி முனியாண்டி

  படங்கள்: ஜனாதிபன் பாலன்

  பிரிஞ்சாங், பிப். 12: அனைத்து நிலையிலான மாணவர்களை உருமாற்றும் சவால்மிக்க பயணத்தை மேற்கொண்டிருக்கும் பிரிஞ்சாங் தேசியப் பள்ளிக்கு என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வேன் என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் சொன்னார்.

  'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்களிடையே உருமாற்றம் காணப்பட வேண்டும். அப்போதுதான் வளரும் தலைமுறை அடுத்தக்கட்ட வளர்ச்சியினூடே பயணிக்க முடியும். அதனை இங்குள்ள பள்ளிகள் மிகச் சிறப்பாகவே செய்து வருகின்றன. அந்த வகையில் பிரிஞ்சாங் தேசியப் பள்ளியும் தமது பங்களிப்பை வழங்கி வருகிறது. எனவே, பிரிஞ்சாங் தேசியப் பள்ளிக்குத் தேவையான உதவிகள் என்னெவென்று ஆராய்ந்து, அவற்றைச் செய்வதற்கு முயற்சிப்பேன் என்றார் அவர்.

  கல்வி அமைச்சின் திட்டங்களில் ஒன்றான, 'ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை' வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அங்குச் சென்ற டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

  கல்வி அமைச்சின் உதவித் திட்டமானது மாணவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. அரசாங்கம் கொஞ்சம்தாம் கொடுக்கிறது என்று சொல்வதை விட, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இவ்வுதவி சென்றடைகிறது என்பது குறித்து நாம் அறிந்து பேச வேண்டும். அதோடு, இந்தத் தொகை சிலருக்கு சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அதனைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு அது பெரிய விஷயமாகும்.

  அந்த நிதியானது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய ஓர் உந்து சக்தியாகக் கூட மாறலாம். நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவருக்கு உதவி செய்ய அரசாங்கம் உதவியாக இருக்கிறது என்ற நல்லெண்ணம் அவர்களிடம் விதைக்கப்படுகிறது. இதன்வழி, கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் மாணவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு காலடி எடுத்து வைப்பார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் தமதுரையில் சொன்னார்.

   

   

   

  பின்செல்