ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உலக மகா ராக்கெட் விண்ணில் பாய்ந்தது! நாசாவை மிஞ்சிய தனியார் நிறுவனம்

  உலக மகா ராக்கெட் விண்ணில் பாய்ந்தது! நாசாவை மிஞ்சிய தனியார் நிறுவனம்

  09/02/2018

  img img

  நியூயார்க், பிப். 9:  கடந்த 2011ஆம் ஆண்டில் 'ஸ்பேஸ் ஷட்டில்' எனப்படும்  விண்வெளிக் கலத்தைத் தயாரிக்கும் வேலையை  'நாசா' நிறுத்திவிட்டது என்றாலும் நாசாவை மிஞ்சும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று நேற்று வெற்றிகரமாக  'ஃபல்கன் ஹெவி' என்ற மிகப்பெரிய ராக்கெட்டை விண்வெளியில் பாய்ச்சியது.

  விண்வெளிக் கலங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு நாசா, அதற்குப் பதிலாக பூமியின் சுற்றுவட்டப்பாதை வரை மட்டும் செல்லும் ராக்கெட்டுகளை உருவாக்கி வந்தது. பூமிக்கு வெளியே நடக்கும் ஆராய்ச்சிகள் அனைத்தும் வானத்தில் இருக்கும் விண்வெளியிலுள்ள அனைத்துலக விண்நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன.

  இதனால் நாசாவின் செவ்வாய்க் கிரகப் பயண ஆசை கனவாகவே இருக்குமோ என்று நினைக்கப்பட்டது. ஆனால் தற்போது உலகின் பெரிய ராக்கெட்டான ''ஃபல்கான் ஹெவி'' என்ற விண்வெளி ராக்கெட்  'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது.

  இதில் உலகில் எந்த ராக்கெட்டிலும் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க்கின் கனவுத் திட்டம்  ஃபல்கான் ஹெவி  என்று கூறலாம். உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும்.

  18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையான வேகமும் கொண்டது இது என்று கூறப்படுகிறது.

  நேற்று முன்தின நள்ளிரவு 12.00 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போலோ 11 ஏவப்பட்ட அதே இடத்தில் இருந்து 18,747 ஜெட் வேகத்தில் ஏவப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய சக்தியை உருவாக்க இதில் 27 எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

  பொதுவாக ஒரு ராக்கெட் பூமியை விட்டு வெளியே சென்றதும் திரும்பி பூமிக்கு வரும் போது காற்றில் உராய்வு ஏற்பட்டுத் தீ பற்றி எரியும். இதுவரை எல்லா ராக்கெட்டுகளும் இப்படித்தான் செயல்பட்டு வந்தன. ஆனால் அதை சில வருடங்களுக்கு முன்பே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்தது. எதிர்காலத்தில் நிலவிற்கும், செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப இந்த ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது.

  பின்செல்