ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  எம்.டி.டி. பத்து காஜா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

  எம்.டி.டி. பத்து காஜா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

  30/01/2018

  img img

  பேரா, எம்.டி.டி. பத்து காஜா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 4.2.2018 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஆலயத்தில் விநாயகர் பூஜை, மகா கணபதி ஓமம் போன்ற விஷேச பூஜைகள் 1.2.2018 தொடங்கி, காலையும் மாலையும் நடைபெறும்.

  ஆலய மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு ஆலயத்தில் 48 நாட்கள் மண்டல அபிஷேக உபயம்  நடைபெறும். 5.2.2018 திங்கட்கிழமை முதல் 24.3.2018 சனிக்கிழமை வரை மண்டல அபிஷேக உபயம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

  4.2.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9:45 முதல் 10:35 மணிக்குள் கும்பங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வருதல், கோபுரம் கும்பாபிஷேகம், தீபாராதனை ‘சிவாகம ரத்னம்‘ ஆகாம ஆசார்யா சிவஸ்ரீ சுரேஷ் குருக்கள் அவர்கள், சுக்காம்பட்டி, தமிழகம், சிவஸ்ரீ நவின்குமார் குருக்கள் ஓம் ஸ்ரீ மஹா நாகக்கன்னியம்மன் கோவில், பத்து காஜா குருக்கள் தலைமையில் இக்கும்பாபிஷேகம் நடைபெறும்.

  மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் வழங்கப்படும். கும்பாபிஷேக தினத்தன்று பெருமனத்துடன் அன்னதானம் வழங்குபவர் திரு. திருமதி கோபால் குடும்பத்தினர் ஆகும். மேற்குறிப்பிட்டுள்ள எல்லா விசேஷங்களுக்கும் அனைவரும் திரளாக வருகைப் புரிந்து சிறப்பிக்கும்படி ஆலய நிர்வாகத்தினர் அன்போடு அழைக்கின்றனர். மேல் விபரங்களுக்கு ஆலயத் தலைவர் திரு.கி.பரதன் 012-536 3485, அல்லது துணைத் தலைவர் திரு.செ.பத்மநாதன் 016-516 0704 அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

  பின்செல்