ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மொழியில் கவனம்

  மொழியில் கவனம்

  10/01/2018

  img img

  இணையத்தைப் பொறுத்தவரை அடுத்த 100 கோடிப் பயனாளிகள் மீதுதான் நிறுவனங்களின் கவனம் இருக்கும். குறிப்பாக, இந்தக் கவனம் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பயனாளிகள் மீது இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தப் புதிய பயனாளிகளைக் கவர்வதில் நிறுவனங்கள், சேவைகளை உருவாக்குபவர்கள் கவனம் செலுத்தக்கூடும். 

  இதில் நிகழக்கூடிய முக்கிய மாற்றம் மொழி சார்ந்ததாக இருக்கும். ஏனெனில், இதுவரை இணையம் என்பது பிரதானமாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் பயன்படுத்தும் நுட்பமாக இருக்கிறது.

  ஆனால், புதிய பயனாளிகள் ஆங்கிலம் அல்லாமல் தங்கள் தாய்மொழியில் இணையத்தைப் பயன்படுத்த விரும்புகிறவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் செல்போன்கள் வாயிலாகவே இணையத்தில் நுழைய வாய்ப்புள்ளது. இதன் விளைவாக செல்போன்களின் இயங்குதளம், உள்ளீ ட்டுக்கான விசைப்பலகை ஆகியவை உள்ளூர் மொழிகளில் அமைய அதிகம் வாய்ப்புள்ளது. எல்லாவற்றிலும் மொழியாக்க சேவைகள் வரலாம். குரல்வழி சேவைகளும் தீவிரமாகும். கடைக்கோடி மக்களையும் சென்றடையக்கூடிய சேவைகளை உருவாக்குவதில் மென்பொருளாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

  பின்செல்