ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  5ஜி நுட்பம்

  5ஜி நுட்பம்

  10/01/2018

  img img

  தொலைத்தொடர்புத் துறையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு சோதனையான ஆண்டுதான். இந்தத் துறையில் பெரும் போட்டி ஏற்பட்டு, பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது. 

  இது நுகர்வோருக்கு எந்த அளவு நல்லது எனத் தெரியவில்லை. ஆனால், தொழில்நுட்ப நோக்கில் பார்த்தால், இந்த ஆண்டு 5ஜி நுட்பம் மீதான கவனம் அதிகமாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறியுள்ள நிலையில், 5ஜிக்கான பாய்ச்சலுக்கு உலகம் காத்திருக்கிறது. 

  5ஜி நுட்பத்தில் இணையம் பத்து மடங்கு வேகத்தில் உள்ளங்கையில் வந்து சேரும். இதற்கான பிரத்தியேக போன்களும் சேவைகளும் உருவாகலாம். இதற்கான தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டு தீவிரமாக வாய்ப்புள்ளது. இணைய ஸ்ட்ரீமிங், வீடியோ கேம் விளையாட்டு, ஆக்மண்டெட் ரியாலிட்டி போன்ற கருத்தாக்கங்கள் இன்னும் பரவலாக வாய்ப்புள்ளது.

  பின்செல்