ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கல்வி என்றால் என்ன...? அறிஞர்களின் அசத்தல் பொன்மொழிகள்!

  கல்வி என்றால் என்ன...? அறிஞர்களின் அசத்தல் பொன்மொழிகள்!

  01/06/2017

  img img

  காமராஜர்

  சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வியும் உழைப்பும் போதுமானது.

  அப்துல் கலாம்

  கருப்பு இருளுக்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால், கரும்பலகைதான் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது. 

  பேரறிஞர் அண்ணா

  ஒரு நல்ல நூலைப் போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை!

  பாரதியார்

  நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.

  டாக்டர் அம்பேத்கர்

  ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவனாகவும் திகழ வேண்டும். அதுவே ஜனநாயகம்.

  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது.

  ஆபிரகாம் லிங்கன்

  நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். 

  பெர்னார்ட்ஷா

  வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது

   

  பின்செல்