ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பொது நலனின் அக்கறை காட்டும் மைபிபிபி

  பொது நலனின் அக்கறை காட்டும் மைபிபிபி

  21/04/2017

  img img

  சுகாதாரமான சுற்று சூழலை ஏற்படுத்தி தந்த தம்பின் தொகுதி மைபிபிபி உறுப்பினர்கள்

  கால்வாயில் குப்பைகள் அடைப்பினால் தாமான் குனுங் மாஸ் வசிப்பிட மக்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி வந்தனர். இவர்களின் பிரச்சினையை களைய தைப்பிங் தொகுதி மைபிபிபி உறுப்பினர்கள் முன் வந்தனர். கால்வாய் அடைப்பு குறித்து தம்பின் மாவட்ட பேரவையிலும் கழிவுப் பொருள் மேலாண்மை அமைப்பிலும் புகார் செய்து அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். டிங்கி, ரோத்தா கிருமி, எச்1என்1 போன்ற நோய்களால் தாக்கப்படாமல் இருக்க சுற்றுப் புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தம்பின் தொகுதி மைபிபிபியினர் இந்த சுகாதார நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

  ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

  தம்பின் கெமாஸ் பகுதியின் முக்கிய சாலை ஓரத்தில் மூங்கில் மரம் வளர்ந்து ஓட்டுநர்களுக்கு இடையூராகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. கனரக வாகனங்களான லோரி, பஸ் போன்றவை பயணிக்கும் போது அம்மூங்கில் மரத்தை உரசி செல்ல வேண்டிய நிலை. அதோடு மின்வாரிய கேபல்களினூடே இந்த மூங்கில் மரம் வளர்ந்துள்ளதால் சாலையில் பயணிப்பவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இது ஆபத்தானது என்றுணர்ந்த தம்பின் தொகுதி மைபிபிபி உறுப்பினர்கள் உடனடியாக அம்மரத்தை அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்தப் பிரச்சினை குறித்து தம்பின் மாவட்ட பேரவையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  சமூக மேம்பாட்டு இலாகாவிடமிருந்து 

  உதவிகள் பெற பாரங்களை பூர்த்தி செய்ய உதவி 

  தாமான் புக்கிட் தம்பினில் வசிக்கும் திருமதி விசாலெட்சிக்கு சமூக மேம்பாட்டு இலாகாவிடமிருந்து உதவிகள் பெற்றுத் தர, தாமான் புக்கிட் ரியா மைபிபிபி கிளைத் தலைவர் திருமதி மல்லிகா அதன் தொடர்பான பாரங்களை பூர்த்தி செய்து தந்தார்.

  நடக்க முடியாதவருக்கு சக்கர நாற்காலி உதவி

  பாதத்தில் ஏற்பட்ட காயத்தினால் நடக்க சிரமப்பட்ட திருமதி ராஜகண்ணுக்கு தாமான் குலோன்லீ மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் யோகேஸ்வரன் சக்கர நாற்காலியை வழங்கி உதவினார்.

  நோயாளியை சந்தித்தல் 

  உடல் நலம் குன்றிய திருமதி தனலெட்சுமியை சந்தித்த தாமான் புக்கிட் ரியா மைபிபிபி கிளைத் தலைவர் திருமதி மல்லிகா அவரின் மருத்துவ உதவியைப் பெற்றுத் தர முன் வந்தார்.

   

  பின்செல்