ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  50 விழுக்காடு வரை எகிரும் கல்விக் கட்டணம் அனைத்துலக பள்ளிகளின் பெற்றோர்கள் குமுறல்

  50 விழுக்காடு வரை எகிரும் கல்விக் கட்டணம் அனைத்துலக பள்ளிகளின் பெற்றோர்கள் குமுறல்

  21/04/2017

  img img

  பெட்டாலிங் ஜெயா, ஏப். 21: கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அனைத்துலக தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 50 விழுக்காடு வரையில் உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

  இவ்விவகாரம் தொடர்பில் பெற்றோர்களிடமிருந்து குவிந்த புகார்களைத் தொடர்ந்து, கல்வி அமைச்சின் தனியார் கல்விப் பிரிவின் தரப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பள்ளிக்கு வருகை மேற்கொண்டதாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான டினேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். 

  மேலும், இவ்விவகாரம் குறித்துப்பேசிய கல்வித் துறை தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் கைர் முகமட் யூசோஃப், “நாட்டின் கல்வித் துறை விதிமுறைகள் (கல்விக் கூடங்களில் பதிவு) 1997இன் கீழ், கல்விக் கட்டணத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் கல்விக் கூடம், அதன் தொடர்பில் முதலில் அமைச்சின் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களின் தலைமை பதிவாளரின் அனுமதியைப் பெற வேண்டும்’’ எனக் கூறினார். 

  சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்த மாற்றத்திற்கான விண்ணப்பத்தை 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அப்பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும். 

  மேலும், உயர்த்தப்படும் கல்விக் கட்டணமானது தற்போதைய கட்டணத்தைவிட 30 விழுக்காடு மட்டுமே அதிகமாக இருத்தல் வேண்டும். அத்துடன், அந்தக் கட்டண உயர்வுக்கான உரிய காரணங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளித் தரப்பினர் அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும். 

  அமைச்சரவையின் நிபந்தனை வெறும் 30 விழுக்காடாக மட்டுமே இருக்கும் வேளையில், அந்த தனியார் பள்ளி நிர்வாகம் 50 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தியிருப்பதுடன் அதன் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எவ்வித முன் அறிவிப்பையும் செய்யாதது, அப்பெற்றோர்கள் மத்தியில் குழப்பங்களையும் எழச் செய்துள்ளது.

  இதனிடையே, சம்பந்தப்பட்ட அப்பள்ளி கட்டணத்தை உயர்த்துவதற்கான தகுந்த செயல்முறைகளைக் கடந்து அமைச்சிடம் அனுமதியும் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. 

  இவ்விவகாரம் குறித்துப் பேசிய டேய்லர்ஸ் அனைத்துலக தனியார் பள்ளியின் தலைவர் பி.கே.ஙான், “3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்விக் கட்டணத்தை உயர்த்த கல்வி அமைச்சு எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது” எனக் கூறிப்பிட்டார். 

  மேலும், கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்னர், அதனைப் பற்றி பெற்றோர்களுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயமும் அத்தகைய பள்ளிகளுக்கு விதிக்கப்படவில்லை. ஏனெனில், அது அப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணமாகலாம். பெற்றோர்கள் குறைவான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை மாற்றிவிடக்கூடும் எனவும் அஞ்சி அத்தகைய பள்ளி நிர்வாகத்தினர், கட்டண உயர்வை முன் அறிவிப்பு செய்வதில்லை எனக் கூறப்படுகிறது.

  பின்செல்