ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மைபிபிபி ஜெம்போல் தொகுதியின் ஆண்டுக் கூட்டம் டத்தோ லீலா யாசின் சிறப்பு வருகை

  மைபிபிபி ஜெம்போல் தொகுதியின் ஆண்டுக் கூட்டம் டத்தோ லீலா யாசின் சிறப்பு வருகை

  21/04/2017

  img img

  பாகாவ், ஏப். 21: ஜெம்போல் தொகுதி மைபிபிபியின் ஆண்டுக் கூட்டம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில் தாமான் ஸ்ரீ பெலாத்திங் பாலாய் ராயாவில் நடைபெற்றது. 

  தேசிய கீதம், மைபிபிபி பாடலுடன் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து தொகுதி செயலாளர் வீ.இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். அவர் தமதுரையில் சிறப்பு வருகையாளர்கள் அனைவருக்கும் வணக்கமும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார். 

  தொடர்ந்து தொகுதி தலைவர் வெ.சரோஜா தலைமையுரையாற்றினார். அவர் தமதுரையில் வரும் 14ஆம் பொதுத் தேர்தலில் ஜெரம் பாடாங் சட்டமன்றத்திற்கு புதிய தேசிய முன்னணி வேட்பளரை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். 

  போட்டியிடும் வேட்பாளர் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தனாகவும் மக்களுக்கு சிறந்த சேவையைச் செய்யக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, தொகுதியின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தமக்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

  ஆண்டு பொதுக்கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாலோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ லீலா யாசின், மைபிபிபி ஜெம்போல் தொகுதி, தலைவி வெ.சரோஜா தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுவதாகச் சொன்னார். வரும் 14ஆம் பொதுத் தேர்தலில் அனைவரும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். 

  இந்நிகழ்வில் மைபிபிபி தேசிய உதவித் தலைவர் டத்தோ ஸக்காரியா, பகாவ் நெகிரி செம்பிலான் எஃப்சி கால்பந்து குழுவின் நிர்வாகி டத்தோஸ்ரீ டாக்டர் சுரேஷ், மைபிபிபி தம்பின் தொகுதி தலைவர் ராஜா, மைபிபிபி நெகிரி செம்பிலான் மாநில மகளிர் தலைவி இந்திரா தேவி, எம்போல் தொகுதி மஇகா கிளைத் தலைவர்கள் சி.கன்னியப்பன், எஸ்.நாதன், கு.மூர்த்தி, வெ.கிருஷ்ணன், பகாவ் சமூக சேவகி எம்.சரோஜா உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

   

  பின்செல்