ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  நெகாராகூ கலை போட்டியை முன்னிட்டு பிரதமர் முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்திடல்

  நெகாராகூ கலை போட்டியை முன்னிட்டு பிரதமர் முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்திடல்

  20/04/2017

  img img

  புத்ராஜெயா, ஏப்.20: 'நெகாராகூ' கலை போட்டியை முன்னிட்டு, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலையில் கல்வி அமைச்சுக்கும், சுற்றுலா, பண்பாட்டு அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. 

  இந்தப் போட்டி நாடளாவிய நிலையில் உள்ள 10,176 மாணவர்களை உள்ளடக்கியது. மாணவர்களின் சிறந்த கலைப் படைப்பு தேசிய கலைக் கூடத்தில் வரும் மலேசிய நாள் வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

  'நெகாராகூ' திட்டத்தின் வழி மாணவர்களிடையே நாட்டுப் பற்றை விதைத்து அதனை கலைப் படைப்பாக வெளிக்கொணருவதே இவ்விரு அமைச்சின் நோக்கமாகும். 

  சுற்றுலா, பண்பாட்டுத் துறையை பிரதிநிதித்து அதன் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் கஃபார் தம்பி, தேசிய கலை மேம்பாட்டு ஆணைய தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் நஜிப் அகமட் டாவா ஆகியோரும் கல்வி அமைச்சை பிரதிநித்து அதன் தலைமை இயக்குநர் டான்ஶ்ரீ டாக்டர் கயிர் முகமட், தலைமைச் செயலாளர் டத்தோ அலியாஸ் அகமட் ஆகியோர் உடன்படிக்கை கையெழுத்திட்டனர். 

  அடிமட்ட மக்கள் வரை நாட்டுப் பற்று விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் 'நெகாராகூ' திட்டம் பிரதமரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதை தத்தம் இலட்சியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார். 

  இந்தப் போட்டி வரும் மே 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆரம்ப, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு திறக்கப்படும். வெற்றியாளர்களுக்கு 100,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. 

   

  பின்செல்