ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஹிஷாமுடினை சிறப்பு விவகார அமைச்சராக்க நான்தான் பரிந்துரை செய்தேன்! டத்தோஶ்ரீ ஸாஹிட் தகவல்

  ஹிஷாமுடினை சிறப்பு விவகார அமைச்சராக்க நான்தான் பரிந்துரை செய்தேன்! டத்தோஶ்ரீ ஸாஹிட் தகவல்

  20/04/2017

  img img

  புத்ராஜெயா, ஏப்.20: பிரதமர், துணைப் பிரதமரின் பணிகளைச் செய்வதற்காக டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் சிறப்பு விவகார அமைச்சராக நியமிக்கப்படவில்லை. மாறாக, உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தீவிரமாகச் செயல்படும் அரசாங்கத்திற்கு உதவவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

  ஹிஷாமுடினை சிறப்பு விவகார அமைச்சராக நியமிக்கலாம் என தாமே பிரதமரிடம் பரிந்துரை செய்ததாக அவர் சொன்னார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஹிஷாமுடின் கலந்து கொள்ளாத ஒரு சந்திப்புக் கூட்டத்தில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது. 

  "நான், பிரதமர் நஜிப், ஹிஷாமுடின் மூவருமே தற்காப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளோம். இதனால், பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் எங்களுக்கு விரிவாகத் தெரியும். ஆகையால், ஹிஷாமுடின் இந்தப் பதவிக்கு தகுதியானவர் என மனப்பூர்வமாக பரிந்துரை செய்தேன்" என்று ஸாஹிட் கூறினார். 

  நேற்று மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ஹிஷாமுடின், துணைப் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அரசாங்கத்தையும் கட்சியையும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டன. 

  மேலும், இந்தச் சந்திப்பு ஸாஹிட் - ஹிஷாமுடின் இடையில் நல்லுறவு இருப்பதை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   

  பின்செல்