ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அவாஸ், கெஜாரா அமல் 3 நாட்களில் 10,000 பேருக்கு அபராதங்கள்

  அவாஸ், கெஜாரா அமல் 3 நாட்களில் 10,000 பேருக்கு அபராதங்கள்

  20/04/2017

  img img

  கோலாலம்பூர், ஏப். 20: 'அவாஸ்' எனப்படும் தானியங்கி பாதுகாப்பு விழிப்புணர்வு முறையும் 'கெஜாரா' எனப்படும அபராதப் புள்ளி முறையும் அமல்படுத்தப்பட்ட 3 நாட்களுக்குள் சாலை போக்குவரத்துத் துறை 10,000 வாகனமோட்டிகளுக்கு அபராதங்களை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  அவற்றுள் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் சென்றதற்காக 5,972 அபராதங்களும் வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்கு 5,455 அபராதங்களும் வெளியிடப்பட்டுள்ளனவாக போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ அப்துல் அஸிஸ் கப்ராவி குறிப்பிட்டார். 

  இந்தப் புதிய முறைகள் ஏப்ரல் 15ஆம் தேதிதான் அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை மிக அதிகமான அளவில் பதிவாகியுள்ளது. எனினும், வாகனம் ஓட்டும் உரிமம் ரத்து செய்யப்படும் அளவிலான குற்றங்கள் ஏதும் இன்னும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார். 

   

  பின்செல்