ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலை, கம்போங் கோலா போ இளைஞர்களுக்கு புதிய சேப்பாக் தக்ராவ் விளையாட்டுத் தளம்! டான்ஶ்ரீ கேவியஸ் வாக்குறுதி

  கேமரன்மலை, கம்போங் கோலா போ இளைஞர்களுக்கு புதிய சேப்பாக் தக்ராவ் விளையாட்டுத் தளம்! டான்ஶ்ரீ கேவியஸ் வாக்குறுதி

  20/04/2017

  img img

  ரதி முனியாண்டி

  படங்கள்: ஜனாதிபன் பாலன் 

  கேமரன்மலையில் அமைந்துள்ள கம்போங் கோல போ பூர்வக்குடி இளைஞர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், புதிய 'சேப்பாக் தக்ராவ்' தளத்தை அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்தார். 

  ஏற்கெனவே, சில பூர்வக்குடி கிராமங்களில் இளைஞர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைக்கு 'சேப்பாக் தக்ராவ்' தளத்தை அமைத்துக் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

  இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நமது நாடு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. நமது புதிய தூர நோக்கு இலக்கு கூட இளைஞர்கள் எதிர்பார்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே கருத்துக் களம் நடத்தப்பட்டு வருகின்றது. 

  கேமரன்மலை மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி இங்கு களப்பணியில் உள்ள தாம் இளைஞர்களின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக டான்ஶ்ரீ கேவியஸ் தெரிவித்தார். 

  "இங்குள்ள இளைஞர்கள் கேமரன்மலை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என என்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னை நாடலாம். 

  கேமரன்மலையை வளப்படுத்துவதே எனது நோக்கம். அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்ய இளைஞர் படையினர் எனக்கு ஆலோசனைகளை வழங்கலாம்" என்று கம்போங் கோல போ மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

  இதனிடையே, கம்போங் சுங்கை லோங், சுங்கை ரந்தாவ் மக்களையும் டான்ஶ்ரீ கேவியஸ் சந்தித்தார். அங்குள்ள பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தம்மால் இயன்ற உதவிகளை வழங்க தயார் என்றும் தெரிவித்தார்

  பின்செல்