ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பக்கவாத நோயாளியின் குடும்பச் சுமையைக் குறைக்க புந்தோங் மைபிபிபி தலைவர் டத்தோ நாரான் சிங் உதவி

  பக்கவாத நோயாளியின் குடும்பச் சுமையைக் குறைக்க புந்தோங் மைபிபிபி தலைவர் டத்தோ நாரான் சிங் உதவி

  20/04/2017

  img img

  ருபினா மேரி அம்புரோஸ்

  பக்கவாத நோயால் வேலை செய்ய முடியாமல் போனவருக்கு புந்தோங் தொகுதி மைபிபிபி தலைவர் டத்தோ நாரான் சிங் நிதி உதவி வழங்கினார். 

  முன்னதாக பாதுகாவலராக பணிபுரிந்த வந்தவர் பக்கவாத நோயால் வேறெந்த வேலையையும் மேற்கொள்ள முடியாத நிலையில் தம் மூன்று பிள்ளைகளையும் பராமரிக்க பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தார். 

  இவரின் பிரச்சினையை அறிந்த டத்தோ நாரான் அவருக்கு உதவ முன்வந்தார். தொடர்ந்து, சமூக நல இலாகாவிடமிருந்து இவருக்கு உதவிகளைப் பெற்றுத் தரவும் முயற்சித்து வருகிறார்.    

  மக்களின் தேவைகளைத் தேடி அறிந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையே மைபிபிபி கட்சியில் பின்பற்றப்பட்டு வரும் கொள்கையாகும். 

  அவ்வகையில் நாடுதழுவிய நிலையில் உள்ள மைபிபிபி உறுப்பினர்கள் தத்தம் பொறுப்பை செம்மையாக செய்துவருகின்றனர். டத்தோ நாரான் சிங்கின் இந்த சமூக நல நடவடிக்கை அதனை எடுத்துக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.  

   

  பின்செல்