ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பொறுப்புணர்வோடு செயல்படும் ஊடகங்களை நன்றி பாராட்ட தகவல் இலாகா ஏற்பாட்டில் போவ்லிங் விளையாட்டு

  பொறுப்புணர்வோடு செயல்படும் ஊடகங்களை நன்றி பாராட்ட தகவல் இலாகா ஏற்பாட்டில் போவ்லிங் விளையாட்டு

  20/04/2017

  img img

  ரதி முனியாண்டி

  புத்ராஜெயா, ஏப்.20:

  மலேசிய ஊடகங்களிடையே நல்லுறவை வலுப்படுத்த பெரும் பங்காற்றி வரும் மலேசிய தகவல் இலாகா ஏற்பாட்டில் மீண்டும் 'போவ்லிங்' விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

  கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி புத்ராஜெயா ஐஓஐ சிட்டி மாலில் நடைபெற்ற இப்போட்டிக்கு எப்போதும் போல ஊடக நண்பர்களின் பலத்த வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இதில் 23 ஊடகங்களைச் சேர்ந்த 34 குழுக்கள் கலந்து கொண்டன. 

  ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து நடத்தப்படும் இந்த 'போவ்லிங்' விளையாட்டு, இவ்விரு தரப்பினருக்கும் இடையில் ஆரோக்கியமான நட்புறவை ஏற்படுத்தியுள்ளது என வியூகப் பிரிவு துணை இயக்குநர் டத்தோ முகமட் சுகாரி அப்துல் ஹமிட் தெரிவித்தார். 

  மலேசிய தகவல் இலாகாவுக்கு உறுதுணையாக இருந்து தகவல்களைப் பரப்பும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  இந்தப் போட்டிக்கு தொடர்ந்து வருகை புரியும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் தகவல் இலாகாவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். 

  இப்போட்டியில் உத்துசான் மேகா முதலிடத்தையும், என்டிவி7 இரண்டாம் இடத்தையும், ஆர்டிஎம், தகவல் பிரிவு மூன்றாம் இடத்தையும் பிடித்தன. அதிக புள்ளிகள் பெற்ற ஆண், பெண் பிரிவு பரிசுகளை என்டி7 தட்டிச் சென்றது. 

  முதல் பரிசாக 1,000 வெள்ளி வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 800 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 600 வெள்ளியும் வழங்கப்பட்டது. மேலும் 60 அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசும் வழங்கப்பட்டது. 

   

  பின்செல்