ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சுய லாபத்திற்காக கட்சியைப் பயன்படுத்தும் துரோகிகள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்ணீ காட்டம்

  சுய லாபத்திற்காக கட்சியைப் பயன்படுத்தும் துரோகிகள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்ணீ காட்டம்

  20/03/2017

  img img

  பெக்கான், மார்ச் 20: கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் வகையில் அதன் உறுப்பினர்கள் செயல்பட வேண்டுமே தவிர, தங்களின் சுய லாபத்திற்காக கட்சியைப் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.

  14ஆம் பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் செயல்படாமல், கட்சியின் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

  சுய நோக்கத்தை மட்டுமே முன்வைத்து செயல்படுபவர்கள் 'பசு தோல் போர்த்திய புலி'யைப் போன்றவர்கள். இந்த துரோகிகளின் உண்மையான குணம் வரும் 14ஆம் பொதுத் தேர்தலில் வெளிப்படும் என பெக்கான் தொகுதி, கிளை ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் கூறினார். 

  அம்னோ உறுப்பினர்கள் அதன் போராட்டத்திற்கு முன்னுரிமை வழங்கினால், உட்கட்சி பூசல்கள் ஏற்படாது. அனைவரின் ஒருமித்த ஆதரவில் கட்சி இன்னும் வலுவடையும் என்றார் அவர். 

   

  பின்செல்