ஃப்ளாஷ் நியூஸ்

    மலேசியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பவர்கள் தேச துரோகிகள்! டான்ஸ்ரீ கேவியஸ் காட்டம்

    மலேசியப் பொருளாதாரத்தைச்  சீரழிப்பவர்கள் தேச துரோகிகள்! டான்ஸ்ரீ கேவியஸ் காட்டம்
    img img

    கோலாலம்பூர், மார்ச் 20: மலேசியப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் நோக்கத்தில் கீழறுப்பு வேலைகளைச் செய்பவர்கள் தேச துரோகிகளாவர். சொந்த நாட்டுக்கே பங்கம் விளைவிக்க சதி புரியும் இவர்கள் வெட்கப்பட வேண்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் சாடினார். 

    மலேசியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் அவர்தம் வர்த்தக குழுவினரும் வெளிநாட்டு நிறுவனங்களை அணுகி வருகின்றனர். அண்மையில், சவுதி அரம்கோ நிறுவனத்தின் 31 பில்லியன் வெள்ளி முதலீடு இவர்களின் நன்முயற்சியாலேயே சாத்தியப்பட்டது. 

    ஆனால், நமது நாட்டைப் பற்றி அவதூறுகளை பரப்பும் சில நாட்டுப் பற்று இல்லாதவர்களின் செயல் குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்திருந்தார். 

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அந்நிய நாட்டவர்களின் முதலீடு அத்தியாவசியமானது. அதனை கெடுக்க சதித் திட்டம் தீட்டும் தேச துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என டான்ஸ்ரீ கேவியஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

    பின்செல்