சங்காட் ஜெரிங் டோல் சாவடியில் மின் தடை போக்குவரத்து நிலைகுத்தியது

சங்காட் ஜெரிங் டோல் சாவடியில் மின் தடை போக்குவரத்து நிலைகுத்தியது
img img

ஈப்போ, மார்ச் 20: டோல் சாவடியில் ஏற்பட்ட மின் விநியோகத் தடையின் காரணத்தால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலிருந்து சங்காட் ஜெரிங் சாலைக்குள் நுழையும் வழியில் வெளியேறும் வழியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு சங்காட் ஜெரிங் டோல் சாவடியில் ஏற்பட்ட அந்த மின் விநியோகத் தடையால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 30 நிமிடங்கள் வரையில் அதே இடத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. எனினும், கைமுறையாக டோல் கட்டண வசூலிப்பு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கின. அதனையடுத்து, போக்குவரத்தும் பழைய நிலைக்குத் திரும்பியதாக பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, அந்த மின் விநியோகத் தடை சங்காட் ஜெரிங் டோல் சாவடியில் மட்டுமே ஏற்பட்டதாகவும் அந்நெடுஞ்சாலையில் இதர பகுதிகளை அது பாதிக்கவில்லை என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

பின்செல்