ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்பு!

  சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்பு!

  15/03/2017

  img img

  மோகன்ராஜ் வில்லவன்

  இந்திய சமுதாயத்தினர் அனைத்துத் துறைகளிலும் வெற்றி நடைபோட்டு வருவது  போல வர்த்தகத்திலும் மற்ற இனத்தவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் செழித்தோங்க வேண்டும் என்று சிலாங்கூர் ரத்னாஸ் இயக்கத்தின் முயற்சியில் ரவாங் வட்டாரத்தில் மாபெரும் இந்தியர் தொழில்முனைவர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிகழ்வுக்கு ரவாங் வர்த்தகர் மட்டுமில்லாது நாட்டிலுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் சுமார் 10 ஆயிரம் மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழும் ரவாங் வட்டாரத்தில் முதன்முதலாக இந்தப் பயனான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் பவானி தெரிவித்தார்.

  இந்தியர்களிடையே வர்த்தக ஆர்வத்தை தூண்டுவதுடன் மறைந்து நிற்கும் சிறுதொழில் - நடுத்தர வர்த்தகர்களுக்கு ஒரு களம் அமைத்து மக்கள் மத்தியில் அவர்களைப் பிரபலப்படுத்தும் வகையிலேயே இந்தத் தொழில்முனைவர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  ஆகையால், வர்த்தகத்தில் செழித்து நிற்பவர்கள் மட்டுமல்ல புதிதாக இந்தத் துறையில் கால் பதித்தவர்களும் இந்தக் கண்காட்சியில் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கும் கூடாரங்களைப் பெற்று தங்களின் தயாரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தலாம் என தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டாக்டர் பவானி கூறினார்.

  இந்தக் கண்காட்சி இம்மாதம் 25, 26ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் ரவாங் தேசியப் பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  இந்தக் கண்காட்சியை மேலும் அலங்கரிக்கும் வகையில் 100 கூடாரங்களை அமைத்து அனைத்து நிலை வர்த்தகர்களுக்கும் வாய்ப்பு வழங்கவுள்ளதாக எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் இதுவரை 25 கூடாரங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு குறுகியகாலம் மட்டுமே உள்ளதால் ஆர்வமுள்ள சிறு, நடுத்தர வர்த்தகர்கள் விரைந்து பதிந்து கூடாரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இதன் நடவடிக்கை குழுத்தலைவர் அட்ரியன் சுரேஷ் தெரிவித்தார்.

  ஆகவே, இந்த அரிய வாய்ப்பை அனைத்து இந்திய வர்த்தகர்களும் பயன்படுத்தி வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு சார்பில் அட்ரியன் சுரேஸ் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வு குறித்தும் கூடாரங்கள் பதிவுகுறித்து 019-2414999 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

  பின்செல்