ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சீனியின் விலை ஏற்றத்தால் பெரிய பாதிப்பு இல்லை -உள்நாட்டு வாணிப அமைச்சர் விளக்கம்

  சீனியின் விலை ஏற்றத்தால் பெரிய பாதிப்பு இல்லை -உள்நாட்டு வாணிப அமைச்சர் விளக்கம்

  06/03/2017

  img img

  கோலாலம்பூர், மார்ச் 6: சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 11 காசு உயர்த்தப்பட்டுள்ள விவகாரம் எவ்வித பெரிய பாதிப்புகளையும் விளைவிக்காது என்பதால், பொதுமக்கள் அவ்விகாரம் குறித்த எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கேட்டுக்கொண்டார். 

  சீனி விற்பனையின் வழி மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் பெறும் லாபம், போக்குவரத்துச் செலவு உட்பட இதர செலவினங்களையும் ஆராய்ந்த பின்னரே அமைச்சு அந்த விலை ஏற்றத்தை அமல்படுத்தியது. 

  அனைவருமே மாதம் ஒன்றுக்கு முழுமையான ஒரு கிலோ சீனியைப் பயன்படுத்துவது இல்லை. மேலும், தாய்லாந்து போன்ற இதர தென் கிழக்கு ஆசியான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் சீனியின் விலை இன்னும் மலிவாகவே இருந்து வருகிறது. காரணம், அந்நாடுகளில் சீனியின் விலை 3.00 வெள்ளி, அதற்கும் மேல் அமைந்துள்ளது. 

  எனவே, மலேசியாவைப் பொறுத்தவரையில் அரசாங்கம் நியாயமான அளவிலேயே சீனியின் விலையை உயர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

  இதனிடையே, அனைத்துலக ரீதியில் சீனியின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் வெ. 2.84ஆக இருந்து வந்த சீனியின் விலை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் வெ. 2.95ஆக உயர்த்தப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

  பின்செல்