ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ரசாயனத்துறையில் இந்தியா&மலேசியா கூட்டமைப்பு வணிகம் வெற்றி இந்தியத் தூதர் திருமூர்த்தி பெருமிதம்

  ரசாயனத்துறையில் இந்தியா&மலேசியா கூட்டமைப்பு வணிகம் வெற்றி இந்தியத் தூதர் திருமூர்த்தி பெருமிதம்

  24/02/2017

  img img

  கோலாலம்பூர், பிப்.24-: இன்றைய நிலையில் ரசாயனக் கலவையற்ற பொருட்களை உற்பத்தி செய்வது சிரமமான ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு அனைத்து பொருட்களிலும் ரசாயன ஊடுருவல் நிறைந்து காணப்படுகிறது. ரசாயனக் கலவை நிறைந்த பொருட்களின் உற்பத்தியில் எவ்வித தீங்கோ பக்கவிளைவோ இல்லாமல் இருந்தாலே இன்றைய விற்பனைச் சந்தையில் நிலைத்திருக்க முடியும்.

  பொருட்களை உருவாக்குவதற்கு முன்னதாக ரசாயனம் குறித்து அறிந்து வைத்திருந்தால் மேற்கண்ட விவகாரங்களில் நாம் சிக்கித் தவிக்கும் நிலை இருக்காது என இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் நிக்கிலேஷ் கிரி தெரிவித்தார்.

  செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி தலைநகர் ரினோஸன் தங்கும் விடுதியில் நடைபெற்ற ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர் - வாங்குபவர் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கூறினார்.

  இந்த நிகழ்வை மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி தொடக்கி வைத்து உரையாற்றுகையில். மலேசியா - இந்தியா இரு நாடுகள் உடனான கூட்டமைப்பு தொடர்ந்து வெற்றியை நிலைநாட்டி வருகிறது. அதேபோன்று வணிக மேம்பாடும் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் குறிப்பாக இரு நாடுகளுக்கிடையிலான ரசாயன வளர்ச்சி அதிகளவிலான வருவாயை ஈட்டித் தருகிறது. இந்த முன்னேற்றமானது தென்கிழக்காசிய  நாடுகளுக்கான ஏற்றுமதி இறக்குமதிக்கு ஏதுவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  இதன் தொடர்பில் இந்தியாவின் முதல்தர ரசாயனங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் வரும் மார்ச் மாதம் 21, 22ஆம் தேதிகளில் ‘கேப் இந்தியா’ எனப்படும் ரசாயனம்  நெகிழி கண்காட்சி மும்பை மாநகரில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கண்காட்சியில் மலேசியாவில் ரசாயனத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கலந்து கொள்ளுமாறு கெமிஸில் நிறுவனத்தின் துணை இயக்குனர் தீபக் குப்தா கேட்டுக் கொண்டார்.

  அந்தக் கண்காட்சியில் முதல் கட்டமான சந்திப்புக் கூட்டமாக இது விளங்கியுள்ளது. இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் அனைத்துவிதமான ரசாயனம் குறித்த விளக்கங்களும் திறம்பட போதிக்கப்பட்டன. 

  இக்கருத்தரங்கில் இந்தியாவிலிருந்து 29 ரசாயன நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிகழ்வில் அஜெண்டா சூரியாவின் நிறுவனர் ஜெக்கா ராவ், இந்தியத் தூதரகத்தின் தலைமைச் செயலாளர் பிரம்ம குமார் உட்பட பிரமுகர்களுடன் பிரபல ரசாயனத் தொழில் வல்லுனர்கள் பலரும் கலந்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

  ரசாயனத்துறை குறித்தோ இந்தக் கண்காட்சி குறித்தோ மேல் விவரம் பெறவிரும்புவோர்களும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் ஆர்வமுள்ளவர்களும் www.capindiaexpo.in <http://www.capindiaexpo.in> என்ற இணையதளத்தின் வழி தொடர்பு கொண்டு தகவல் அறியுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

  பின்செல்