ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஏற்றுமதி அரிசிகள் விலை ஏற்றம்

  ஏற்றுமதி அரிசிகள் விலை ஏற்றம்

  23/02/2017

  img img

  கோலாலம்பூர், பிப். 23:

  இறக்குமதி செய்யப்படும் அனைத்து ரக அரிசிகளின் விலையும் அடுத்த மாதம் தொடங்கி 5 முதல் 7 விழுக்காடு வரையில் அதிகரிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நிலைத்தன்மையற்ற பொருளாதாரச் சூழலினால், தங்களின் இயக்கச் செலவை ஈடு செய்ய அந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது என்று இறக்குமதி அரிசியின் விற்பனையாளர் தரப்பு கூறியுள்ளது.

  அதனைத் தவிர்த்து, ரிங்கிட் மதிப்பின் சரிவு, எண்ணெய் விலை ஏற்றம் ஆகிய கூறுகளும் அரிசி விலை ஏற்றத்திற்கான காரணங்களாக அமைந்துள்ளன. 35 காசு முதல் 50 காசு வரை அமைந்துள்ள அந்த விலை ஏற்றம், மிக அதிகமானது இல்லை என்றாலும், பயனீட்டாளர்களுக்கு அது சுமையாகவே கருத்தப்படுகிறது. 20 காசு ஏற்றம் என்றாலும், அது ஏற்புடையதாக அமைந்திருக்கும்.

  இதனிடையே, இந்த விலை ஏற்றம் குறித்து தங்களுக்கு தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தகவல் கிடைத்திருப்பதாகவும் பெர்னாஸ் எனப்படும் தேசிய அரிசி நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று விற்பனையாளர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

   

   

  பின்செல்