ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி

  சவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி

  16/02/2017

  img img

  ? ரதி முனியாண்டி 

   

  கேமரன்மலையில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும், அவை தமது சமூகப் பணிகளைத் தொடர தடையாக அமைய ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் உறுதியுடன் கூறினார். 

  கேமரன்மலையின் மேம்பாட்டுக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேமரன்மலையில் 5 நாட்களாக தங்கியிருந்த டான்ஸ்ரீ கேவியஸ், பல்வேறு அமைப்புகளையும் தொழிலதிபர்களையும், பாமர மக்களையும் சந்தித்து வந்தார். 

  போக்குவரத்து, விவசாய நிலம், அந்நியத் தொழிலாளர்கள், வியாபார உரிமம் என பல பிரச்சினைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் களைய டான்ஸ்ரீ கேவியஸ் ஒரு சில மேம்பாட்டுத் திட்டங்களை ஆலோசித்து வருகின்றார். 

  இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முட்டுக் கட்டையாக இருப்பவர்கள், மக்களின் நலனை விரும்பாதவர்கள் என்றே முத்திரை குத்தப்படுவர். தானும் ஏதும் செய்யாமல், பிறரையும் செய்ய விடாமல் தடுப்பது முறையற்ற செயல். 

  எத்தனை தடைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், கேமரன்மலை மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறப் போவதில்லை என டான்ஸ்ரீ கேவியஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

  இதனிடையே, அண்மையில் அவர் கேமரன்மலைக்கு மேற்கொண்ட பயணத்தில், லாடாங் போ தேவாலயத்தில் நேரம் ஒதுக்கி அங்கு வாழும் கிறிஸ்துவ மக்களைச் சந்தித்தார். 

  டான்ஸ்ரீ கேவியசின் வருகையால் அகம் மகிழ்ந்தவர்கள், பிரார்த்தனைக்குப் பின்னர் அவருடன் அளவளாவி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆணவமின்றி, அனை வரிடமும் சகஜமாக பழகிய டான்ஸ்ரீ கேவியஸ் 

  அங்குள்ள அனை வரையும் கவர்ந்து விட்டார் என்றே கூற வேண்டும். 

  அதன் பின்னர், தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 'செப்பாக் தக்ராவ்' விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைச் சந்தித்தார் டான்ஸ்ரீ கேவியஸ். 

  அங்குள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு 'செப்பாக் தக்ராவ்'. ஆனால், முறையான விளையாட்டு இடம் இல்லாதது குறையாகவே உள்ளது என அவர்களின் குறைகளைத் தெரிவித்தனர். 

  தவறான வழிக்குச் செல்லாமல், நேரத்தை நல்ல வழியில் செலவிடும் இளைஞர்கள் பாராட்டத்தக்கவர்கள். ஆகையால், இவர்களின் வசதிக்காக 

  புதிய 'செப்பாக் தக்ராவ்' மைதானத்தை அமைத்துத் தந்து அங்கு போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்வ தாகவும் உறுதியளித்தார் என்பது 

  குறிப்பிடத்தக்கது.

   

  பின்செல்