ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பன்றி உரோமத்திலான சாயத் தூரிகையை: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல!

  பன்றி உரோமத்திலான சாயத் தூரிகையை: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல!

  13/02/2017

  img img

  கூச்சிங், பிப். 13: விலங்குகளின் உரோமத்தில் தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகை விவகாரம் தொடர்பில் வணிகர்கள் மீது அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தமக்கு உடன்பாடில்லை எனப் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

  பன்றி உரோமத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகைகளை பறிமுதல் செய்வதும் அதனை விற்பனை செய்த வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதும் சரியல்ல. மாறாக, அந்த தூரிகை எந்த விலங்கின் உரோமத்திலானது என்பதை முத்திரையிடும்படி அமைச்சு வலியுறுத்தியிருக்க வேண்டும்.

  பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒருவர் மற்ற இனத்தவரை மதிக்க வேண்டும் என சுங் ஹுவா சீனப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட சீனப்புத்தாண்டு நிகழ்வின் போது அவர் சொன்னார்.   

  பல இன மக்களின் புரிந்துணர்வையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநிறுத்த ஒற்றுமையை பாதிக்கும் செயல்களை அரசாங்கம் ஆதரிக்காது.  

  இதனைத் தொடர்ந்து, பன்றி உரோமத்தால் தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகையை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு கடந்த வியாழக்கிழமை, உள்நாட்டு வாணிக கூட்டுறவு பயனீட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹம்சா ஸைனுடின் கட்டளை பிறப்பித்துள்ளார்.  

   

  10,988.94 வெள்ளி மதிப்பிலான 2,003 சாயத் தூரிகைகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கையின் வழி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையேநாய், பன்றி ஆகிய விலங்குகளின் உரோமத்தால் தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகைகளை தனித்தனியே முத்திரையிட வணிகர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

  பின்செல்