ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இந்திய கலாச்சார பண்பாட்டு மையத்தை தோற்றுவிக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு

  இந்திய கலாச்சார பண்பாட்டு மையத்தை தோற்றுவிக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு

  10/02/2017

  img img

  சிலாங்கூர், பிப்.11: பத்துமலை திருத்தலத்தில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் ஒன்றை அமைக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இது மலேசியா வாழ் இந்துக்களுக்கு நற்செய்தியாகக் கருதப்படுகிறது. சமய சுதந்திர கோட்பாட்டின் கீழ் மலேசிய இந்துக்களின் சமய கலை கலாச்சார அம்சங்களைத் தொடர்ந்து பேண ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

  கலை உணர்வும் சமய கலாச்சார கலைகளும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு ஏதுவாக இந்த மையம் செயல்படும் என பெரிதும் நம்பப்படுகிறது. மேலும், நாட்டின் இந்திய கலாச்சார பண்பாட்டு மரபை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கும் இந்த மையம் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில், பத்துமலை திருத்தலத்தில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதை ம.இ.கா. வரவேற் றுள்ளது. அத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு கட்சி முழு ஒத்துழைப்பு நல்கும் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்தார். அரசாங்கம் வழங்கியுள்ள அந்த ஒதுக்கீடு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்திய பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் கால மாற்றத்தினால் அழிந்து போகாமல், புதிய தலைமுறைக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளை வகுக்க இந்த மையம் சீரிய பங்காற்றும் என சுப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.

   

  பின்செல்