ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஆர்ஆர்சி கட்டண விதிப்பு: சிங்கப்பூரின் முடிவுக்கு மலேசியா மதிப்பளிக்கும்!

  ஆர்ஆர்சி கட்டண விதிப்பு: சிங்கப்பூரின் முடிவுக்கு மலேசியா மதிப்பளிக்கும்!

  18/01/2017

  img img

  கோலாலம்பூர், ஜன. 18: சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விதிக்கப்படவிருக்கும் ஆர்ஆர்சி கட்டண நடைமுறையை மலேசியா வரவேற்கிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் கூறினார்.

  ஜோகூரில் நுழையும் வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மலேசியா விதித்த கட்டண விதிமுறையின் பிரதிபலிப்பாக சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்துள்ள இந்த ஆர்ஆர்சி கட்டண நடைமுறை குறித்து சிங்கப்பூருடன் மலேசியா பேச்சு வார்த்தை நடத்தும் என்று அவர் சொன்னார். 

  கடந்த, 1973ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய 'விஇபி' எனப்படும் வாகன நுழைவு அனுமதியைத் தொடர்ந்து அன்று மலேசியா எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. ஆயினும், தற்போது அதற்கான சாலை கட்டணத்தை விதிக்க வேண்டும் என்ற முடிவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜோகூரில் நுழையும் வெளிநாட்டு எண் கொண்ட வாகனங்களுக்கு 20 வெள்ளி விதிக்கப்பட்டது.  

  மலேசியா அமல்படுத்திய 'விஇபி' நடைமுறையின் வழி வெளிநாட்டு எண் கொண்ட வாகனங்களின் பதிவுக் கட்டணமாக 5 வருடங்களுக்கு 10 வெள்ளி மட்டுமே விதிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் சிங்கப்பூர் வாகனங்களுக்கு மட்டும் அல்லாமல் புரூணை, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் அமல்படுத்தப்படுகின்றது.

   

  மலேசியாவைப் போன்று சிங்கப்பூரும் செயல்படுத்தவிருக்கும் ஆர்ஆர்சி கட்டணம் மலேசியாவின் செயல்முறையிலிருந்து மாறுபட்டிருக்கிறது.  எனினும், சிங்கப்பூர் தரை போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ள ஆர்ஆர்சி கட்டண அமலாக்கத்தை மலேசியா மதிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

  பின்செல்